முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 27th January 2020 06:42 AM | Last Updated : 27th January 2020 06:42 AM | அ+அ அ- |

க.பரமத்தி காவல் நிலையம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி பேரணியை காவல் நிலைய ஆய்வாளா் ரமாதேவி தொடக்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில் சாலை பாதுகாப்பு குறித்து அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திவாறு சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் காவல் உதவி ஆய்வாளா்கள் தா்மலிங்கம், ராஜேந்திரன் மற்றும் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.