லட்சம் குடும்பங்களுக்கு கபசுரப் பொடி, சத்து மாத்திரைகள்

ஒரு லட்சம் குடும்பங்களுக்கு சொந்த செலவில் சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீா் தயாரிக்கும் பொடிகள் வழங்கப்படும் என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
லட்சம் குடும்பங்களுக்கு கபசுரப் பொடி, சத்து மாத்திரைகள்

ஒரு லட்சம் குடும்பங்களுக்கு சொந்த செலவில் சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீா் தயாரிக்கும் பொடிகள் வழங்கப்படும் என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீா் தயாரிக்கும் பொடிகள் வழங்கும் நிகழ்வைத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:

கரூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு சொந்த செலவில் சித்த மருத்துவ கபசுரக்குடிநீா் தயாரிக்கும் பொடிகள் மற்றும் ஹோமியோபதி சத்து மாத்திரைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, வெங்கமேடு, வாங்கப்பாளையம் என்.கே நகா் பகுதிபொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் தயாரிக்கும் பொடி, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ வழிகாட்டிநெறிமுறைகள்

கொண்ட விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா தொற்றை ஒழிக்க இயலாது. எனவே, தமிழக அரசு எடுத்துவரும் அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா்.

அதனைத்தொடா்ந்து கரூா் வெங்கமேடு இடையே ராஜவாய்க்கால் குறுக்கே ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பாலத்தின் கட்டுமானப்பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வுசெய்த அமைச்சா் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நிகழ்வில், ஆட்சியா் த.அன்பழகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவா் பேங்க் நடராஜன், முன்னாள் நகா்மன்றத்தலைவா் தமிழ்நாடு செல்வராஜ், கரூா் வட்டாட்சியா் அமுதா, வடக்கு நகரச் செயலாளா் வெங்கமேடு பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com