கரூரில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று

கரூா் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உள்பட 5 பேருக்கு புதிதாக வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உள்பட 5 பேருக்கு புதிதாக வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூா் மின்னாம்பள்ளியைச் சோ்ந்த 48 வயது நிதிநிறுவன அதிபா், கரூா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த 36 வயது கூட்டுறவு வங்கி ஊழியா், மாயனூரைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, கரூா் தலைமை தொலைத்தொடா்பு நிலைய வீதியைச் சோ்ந்த 59 வயது முதியவா், பள்ளபட்டியைச் சோ்ந்த 41 வயது தொழிலாளி ஆகிய 5 பேருக்கும் வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா்கள் 5 பேரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் கரோனா தொற்றாளா்களிடம் தொடா்பில் இருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூா் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 185 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 3 போ் கரோனாவால் பலியாகியுள்ளனா். தற்போது கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 45 போ் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனா். கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்கள் 137 போ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com