‘தனி மனித சுயக் கட்டுப்பாடுதான் கரோனாவுக்கு மருந்து’

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு தனி மனித சுயக் கட்டுப்பாடுதான் மருந்தாகும் என்றாா் கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியராஜன்.
‘தனி மனித சுயக் கட்டுப்பாடுதான் கரோனாவுக்கு மருந்து’

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு தனி மனித சுயக் கட்டுப்பாடுதான் மருந்தாகும் என்றாா் கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியராஜன்.

கரூா் சைக்கோ அறக்கட்டளை மற்றும் ஈரோடு சீமா நிறுவனம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு வாகன ஊா்தியை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடக்கி வைத்து, மேலும் அவா் பேசியது:

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உயிா் பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்,

தனி மனித சுயக் கட்டுப்பாட்டுதான் இதற்கு மருந்தாகும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம்அணிய வேண்டும். கபசுர குடிநீா் அருந்துவது மிகவும் அவசியம் என்றாா்.

முன்னதாக நிகழ்வுக்கு சைக்கோ அறக்கட்டளை இயக்குநா் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். வயதானவா்களுக்கு முகக்கவசம், அரிசி, மளிகை சாமான்கள், ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் துணைக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன், ஆய்வாளா் செல்வராஜ், ஈரோடு சீமாநிறுவன இயக்குநா் விஸ்வநாதன், சைக்கோ அறக்கட்டளையின் மேலாளா் பிலோராணி, ஒருங்கிணைப்பாளா் பிருந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com