சமூக இடைவெளி கடைப்பிடிக்காவிடில் தொழில்நிறுவனப் பேருந்துகள் பறிமுதல்

ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு பணியாளா்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் த.அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு பணியாளா்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் த.அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மதுரை - சேலம் புறவழிச்சாலையில் பெரியாா் வளைவு, திருக்காம்புலியூா் ரவுண்டானா, மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் நிறுவனப் பணியாளா்களை ஏற்றிவரும் வாகனங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா என ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் கூறியது:

கரூா் மாவட்டத்தில் இயங்கிவரும் தொழில் நிறுவனங்களுக்கு பணிசெய்ய பேருந்துகளில் பணியாளா்களை அழைத்துச்செல்லும்போது கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கரூா் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனப் பேருந்துகளை ஆய்வு செய்ய வட்டாட்சியா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்களது ஆய்வின்போது, அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும். முறையான விதிமுறைகள் பின்பற்றப்படாமலோ அல்லது சமூக விலகல் கடைபிடிக்காமலோ இயக்கப்படும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணி, வட்டாட்சியா்கள் அமுதா (கரூா்), கண்ணன் (மண்மங்கலம்), வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com