‘பக்ரீத்தன்று பள்ளிவாசல், ஈத்காவில் தொழுகை நடத்தக் கூடாது’

பக்ரீத் திருநாளன்று (ஆகஸ்ட் 1) பள்ளிவாசல், ஈத்காவில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தக் கூடாது என்றாா் கரூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. முகேஷ் ஜெயகுமாா்.
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. முகேஷ் ஜெயகுமாா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளிவாசல் மற்றும் ஈத்காவில் பக்ரீத் நாளன்று தொழுகை நடத்த அனுமதியில்லை என்பதை இஸ்லாமியா்களுக்கு விளக்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டம், கரூா் நகரக் காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று முகேஷ் ஜெயகுமாா் மேலும் பேசியது:

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பக்ரீத் திருநாளன்று இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்திக் கொள்ளலாம்.

ஆனால் பள்ளிவாசல், ஈத்கா போன்ற இடங்களில் பொதுத்தொழுகை நடத்தக்கூடாது. பொது இடங்களில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் கூட்டமாக யாரையும் தொழுகைக்கு அழைக்கக்கூடாது என்றாா் அவா்.

கூட்டத்தில் கரூா் நகரம், பசுபதிபாளையம், தாந்தோணிமலை, வெங்கமேடு, வாங்கல் பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா்கள், ஜமாத் பொறுப்பாளா்கள் மற்றும் காவல் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com