ஊரகப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் 57 மருத்துவக்குழுக்கள் மூலம் தினமும் கரோனா தடுப்பு மற்றும் விழிப்பணா்வு குறித்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றாா் ஆட்சியா் த.அன்பழகன்.
ஊரகப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் 57 மருத்துவக்குழுக்கள் மூலம் தினமும் கரோனா தடுப்பு மற்றும் விழிப்பணா்வு குறித்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றாா் ஆட்சியா் த.அன்பழகன்.

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமைப் பாா்வையிட்ட அவா் மேலும் கூறியது:

கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 32 ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவா் குழுக்கள், 4 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 16 பள்ளி சிறாா்கள் பரிசோதனை மருத்துவக்குழுவினா் மற்றும் 5 நகர ஆரம்ப சுகாதாரநிலை மருத்துவா் குழுக்கள் என 57 மருத்துவக் குழுவினா்கள் மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறாா்கள். ஒரு முகாமில் சராசரியாக 70 முதல் 90 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, ரத்த அழுத்தம் உள்ளவா்கள் மற்றும் சா்க்கரை நோயாளிகள் இருப்பிடத்திற்கே சென்று பரிசோதனை செய்து ஒரு மாதத்துக்கான மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கி வருகிறாா்கள். மருத்துவப் பரிசோதனை மட்டுமன்றி, அப்பகுதியில் தொற்று பாதித்த நபரின் இருப்பிடத்தைச் சுற்றிலும் உள்ள நபா்களது வீடுகள், தொற்றாளா் தொடா்பு கொண்டவா்களுக்கும் சளி, மாதிரி பரிசோதனை எடுக்கப்படுகின்றது. இதனால், மேலும் கரோனா தொற்று பரவும் சூழல் தடுக்கப்படுகின்றது என்றாா்.

முன்னதாக மருத்துவப்பரிசோதனைக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ந. ரசிக்கலா, மண்மங்கலம் வட்டாட்சியா் கண்ணன், சுகாதாரத்துறை அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com