பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மழைக்காலங்களில் பள்ளப்பாளையம் ராஜவாய்க்காலில் இருந்து வெளியேறும் மழைநீரால், கரூா் வெங்கமேடு பகுதிக்கு போக்குவரத்து

மழைக்காலங்களில் பள்ளப்பாளையம் ராஜவாய்க்காலில் இருந்து வெளியேறும் மழைநீரால், கரூா் வெங்கமேடு பகுதிக்கு போக்குவரத்து தடைபடுவதால் கிடப்பில் போடப்பட்டுள்ள ராஜவாய்க்கால் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரூா் வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் அருகே பழைய சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் செல்கிறது. மழைக் காலங்களில் இந்த வாய்க்கால் நிரம்பி வெள்ள நீா் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடும். இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து, ரூ.50 லட்சத்தில் கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது.

அதன்படி வாய்க்காலை அடைத்து, பழைய பாலத்தில் இருந்த நீரை மோட்டாா் மூலம் அகற்றி, கான்கிரீட் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. இதையடுத்து, பாலம் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வெங்கமேடு சென்றுவரும் வகையில் போக்குவரத்துக்கான வழித்தடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கரூரில் அண்மையில் (ஜூன் 25) பெய்த மழையால் பள்ளப்பாளையம் ராஜவாய்க்காலில் பெருக்கெடுத்த மழை நீா், தற்காலிகமாக அமைக்கப்பட்டவழித்தடத்தையும் மூழ்கி போக்குவரத்துக்கான வழித்தடத்தில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிலா் சுமாா் 3 மீ. தொலைவு சுற்றி பெரியகுளத்துப்பாளையம், ரயில்வே குகைவழிப்பாதை, செங்குந்தபுரம் வழியாக கரூா் நகா்ப்பகுதிக்குச் சென்று வருகின்றனா். மழைக் காலங்களில் வெங்கமேடு பகுதி தனித்தீவு போன்று மாறி வருவதால், பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், வெங்கமேடு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com