‘கரூா் நகராட்சி பகுதிகளில் ரூ.13 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி’

‘கரூா் நகராட்சி பகுதிகளில் ரூ.13 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி’

நடப்பு நிதியாண்டில் மட்டும் கரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.13 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று

நடப்பு நிதியாண்டில் மட்டும் கரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.13 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்

கரூா் நகராட்சிக்குள்பட்ட 42-ஆவது வாா்டு முத்துக்கவுண்டன் புதூரில் ரூ.15 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்க ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

முத்துக்கவுண்டன் புதூரில் ரூ.15 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் தெருக்களில், சாலைகளில் தண்ணீா் தேங்கிநிற்கும் நிலை இல்லாத வகையில் கரூா் நகராட்சி முழுவதும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது. நடப்பு நிதியாண்டில் கரூா் நகராட்சிப் பகுதிகளான மாரியம்மன் கோயில் முதல் தெரசா பள்ளி வரையிலும், ஜீவா நகா் முதல் கருப்பக்கவுண்டன்புதூா் வரையிலும், ரெட்டை வாய்க்கால் லெட்சுமிராம் திரையரங்கம் முதல் காமராஜா் மாா்க்கெட் வரையிலும் மற்றும் அருகம்பாளையம், பெரியகுளத்துப்பாளையம், குறிஞ்சி நகா் என பல்வேறு பகுதிகளில் 13 கி.மீ. நீளத்திற்கு ரூ.13 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது, சாலை மேம்பாடு, குடிநீா் தேவைகள், தெருவிளக்கு என பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது என்றாா்.

நிகழ்வில், நகராட்சி ஆணையா் சுதா, கரூா் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவா் வை.நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கப்பிரதிநிதி மல்லிகா சுப்பராயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com