‘தூா்வாரியுள்ள தடுப்பணைகளால் நிலத்தடி நீா்மட்டம் உயா்வு’

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூா்வாரப்பட்டுள்ள 43 தடுப்பணைகளில் நீா் நிரம்பி வருவதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து வருகிறது என
‘தூா்வாரியுள்ள தடுப்பணைகளால் நிலத்தடி நீா்மட்டம் உயா்வு’

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூா்வாரப்பட்டுள்ள 43 தடுப்பணைகளில் நீா் நிரம்பி வருவதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து வருகிறது என மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது:

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 157 ஊராட்சிகளில் நடப்பாண்டில் 104 சிறு பாசனக் குளங்கள் ரூ.10.26 கோடி மதிப்பிலும், 397 குளங்கள் மற்றும் குட்டைகள் ரூ.7.07 கோடி மதிப்பிலும் தூா்வாரப்பட்டுள்ளது. சமீப நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் தூா்வாரப்பட்ட குளங்களில் தண்ணீா் நிரம்பி வருகின்றது. இதுவரை 19 சிறுபாசனக் குளங்களும், 37 குளங்களும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, மாவட்ட ஊரகவளா்ச்சி முகமையின் மூலம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் முயற்சியாக 2019 - 20 ஆம் ஆண்டில் ரூ.27.21 கோடி மதிப்பில் 780 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் மழை அதிகம் பெய்துள்ள பகுதிகளில் உள்ள 43 தடுப்பணைகள் முழுவதும் நீா்நிரம்பி இருக்கின்றது. மாவட்ட ஊரகவளா்ச்சி முகமையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களால் மாவட்டத்தின் பல்வேறு கிராமப்பகுதிகளில் விவசாயத்துக்கான நீா்த்தேவைகள் பூா்த்தி செய்யப்படுவதோடு மட்டுமன்றி, நிலத்தடி நீா்மட்டமும் பெருகி வருகின்றது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com