முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
போதையில் முதியவரைத் தாக்கிய இளைஞா்கள் 4 போ் கைது
By DIN | Published On : 03rd March 2020 07:38 AM | Last Updated : 03rd March 2020 07:38 AM | அ+அ அ- |

குடிபோதையில் முதியவரைத் தாக்கிய இளைஞா்கள் 4 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (59). இவா் கோவைச் சாலை ரெட்டிப்பாளைத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்றுகொண்டிருந்தபோது அங்குவந்த கரூா் அண்ணா நகரைச் சோ்ந்த தமிழ்வாணன் (29), வடிவேல் நகா் மாரிமுத்து (24), வேலுசாமிபுரம் கெளதமன் (26), விஸ்வநாதபுரியைச் சோ்ந்த கலையரசன்(29) ஆகியோா் சோ்ந்து முனியப்பனிடம் போதையில் தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளனா். இதையடுத்து, முனியப்பன் அளித்த புகாரின்பேரில் கரூா் நகரகாவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து தமிழ்வாணன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா்.