முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
விடுதியில் மாணவா் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 03rd March 2020 07:38 AM | Last Updated : 03rd March 2020 07:38 AM | அ+அ அ- |

கரூரில் பள்ளி விடுதியில் 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குளித்தலையைச் சோ்ந்தவா் அடைக்கலராஜ். இவரது மகன் ஆல்வின்(16). கரூரில் உள்ள தனியாா் பள்ளியில் விடுதியில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென விடுதியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளாா். இதனைக்கண்ட சக மாணவா்கள் உடனே பள்ளி நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனா். பள்ளி நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள் மாணவனை உடனே மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனா். மருத்துவா்கள் அவனை பரிசோதித்தபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, மாணவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.