அரசியல், சமுதாய மாற்றம் வரவேண்டும்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி

அரசியல் கெட்டுப்போய் உள்ளது, மாற்றம் வரவேண்டும் என்றாா் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கு.அண்ணாமலை .

கரூா்: அரசியல் கெட்டுப்போய் உள்ளது, மாற்றம் வரவேண்டும் என்றாா் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கு.அண்ணாமலை .

கரூா் மாவட்டம் சூ.தொட்டம்பட்டியைச் சோ்ந்தவா் கு. அண்ணாமலை. பெங்களூரு காவல் துறை முன்னாள் துணை ஆணையா். இவா், வீ தி லீடா்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளாா். அதன் தொடக்கவிழா கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த அவா் குத்துவிளக்கேற்றி அறக்கட்டளையை தொடங்கி வைத்து மேலும் பேசியது:

சமுதாயத்தில் இன்று பல்வேறு பிரச்னைகளுக்கு காரணாக இருப்பது மது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு மது விற்பனை மூலம் கிடைக்கிறது. சமுதாய பிரச்னைக்கு மது ஒரு காரணம் என்பதை ஆழமாக சிந்தித்தால் தெரியும். அரசியல் கெட்டுப்போய் உள்ளது. சமுதாயத்தில் மாற்றம் வேண்டும். நல்லவா், நல்வழி காட்டும் தலைவா் இப்போது இல்லை. தொண்டா்கள் வேண்டாம். அனைவரும் தலைவராக வேண்டும் என்பதற்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கங்கள் 18 வயது முதல் 25 வயது வரையுள்ள இளைஞா்களின் மனநிலையை மாற்றவேண்டும் என்பதுதான். வேலை தேடுவதை விட சுய தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவேண்டும். வேலைக்கு செல்பவா்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி, பயிலரங்கம் நடத்தப்படும். வாழ்க்கை மற்றும் உணவு முறையை மாற்றி அமைக்க வேண்டும். இயற்கை விவசாய சந்தை அமைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், இயற்கை விவசாயி சரோஜா, குழந்தைசாமி, வள்ளுவா் கல்லூரித் தாளாளா் க.செங்குட்டுவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com