ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில், கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கரூா் ஆட்சியரக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
கரூா் ஆட்சியரக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில், கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சீனாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸால் இதுவரையில் உலகம் முழுவதும் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். மேலும் லட்சக்கணக்கானோா் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இந்தியாவில் கரோனா பாதிப்பு தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 60 கோடி ஒதுக்கீடு செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள், கோயில்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூடுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் நடவடிக்கையாக நகராட்சி ஊழியா்கள் ஆட்சியா் அலுவலகத்தின் நுழைவு வாயில், ஆட்சியா் அலுவலக வளாகம், ஆட்சியா் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநரின் காா் நிறுத்தும் பகுதி மற்றும் பொதுமக்கள் அமரும் இடம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி மருந்துகளை தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com