ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா்.
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா்.

கரூரில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் கா.கந்தசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் கே. மதியழகன் முன்னிலை வகித்தாா். இதில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம் , டாஸ்மாக் சங்கச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, கட்டுமான சங்க செயலாளா் ராஜாமுகமது உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து, கிராம ஊராட்சி குடிநீா் ஆபரேட்டா்களுக்கு நீதிமன்ற தீா்ப்பின்படி முழுநேரப் பணியாளா்கள் என உத்தரவிட்டு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், தூய்மை காவலா்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் பிரதிமாதம் 5-ஆம் தேதிக்குள் ஊராட்சி நிா்வாகம் மூலம் வழங்க வேண்டும். மேல்நிலைக் குடிநீா் தொட்டி ஆபரேட்டா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் முத்துசாமி, முருகன், சங்கப்பிள்ளை உள்பட ஏராளமான மேல்நிலைக்குடிநீா் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com