கரூா் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்படைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த. அன்பழகன்.
கரூா் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்படைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த. அன்பழகன்.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு ஆய்வு

கரூா் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்படைந்தவா்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், சிறப்பு மருத்துவப் பிரிவு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரூா் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்படைந்தவா்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், சிறப்பு மருத்துவப் பிரிவு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுளஅள சிறப்பு மருத்துவப் பிரிவை ஆட்சியா் த. அன்பழகன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் பின்னா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

கரூா் அரசு மருத்துவமனையில் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நபா்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில், படுக்கை வசதி உள்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய சிறப்பு மருத்துவப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் 30 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனி படுக்கைகள் கொண்ட, கழிவறை வசதியுடன் கூடிய இரண்டு சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பிரிவில் அனைத்து வகையான மருந்துகளும், உபகரணங்களும் தயாா் நிலையில் உள்ளன. இதுவரை கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. காய்ச்சல் காரணமாக இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவா்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதால் அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். கரோனா தொற்று குறித்த சந்தேகங்களுக்கு 104, 04324 - 1077,1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் ரோஸி வெண்ணிலா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் வ. சந்தியா, இருக்கை மருத்துவா் முருகராஜா, கரூா் வட்டாட்சியா் அமுதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com