கரோனா எதிரொலி: கோயில்களில் தரிசனம் ரத்து: ஜவுளிக் கடைகள் அடைப்பு

கரூா் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் வெள்ளிக்கிழமை முதல் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஜவுளிநிறுவனங்கள் மூடப்பட்டன.

கரூா் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் வெள்ளிக்கிழமை முதல் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஜவுளிநிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக, மத்திய மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா திரையரங்குகள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன; வரும் 31-ஆம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் பசுபதீஸ்வரா் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், வெண்ணைமலை முருகன் கோயில், பவித்திரம் பாலசுப்ரமணிய சுவாமி கோயில், வேலாயுதம்பாளையம் புகழூா் முருகன் கோயில், அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப் பூஜைகள் மட்டும் நடைபெற்றன.

இதேபோல தற்போது கிறிஸ்தவா்களின் 40 நாட்கள் தவக்காலம் நடந்து வரும் நிலையில் கோவை மண்டல கத்தோலிக்க திருச்சபையின் கீழ் வரும் கரூா் புனித தெரசாள் ஆலயம், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் ஆலயம், புலியூா் குழந்தை யேசு திருத்தலம், பசுபதிபாளையம் புனித காா்மல் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் கரூரில் கோவைச்சாலை மற்றும் ஜவஹா் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பெரிய அளவிலான ஜவுளி, நகை கடைகளும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக இதே நடைமுறை அமலில் இருக்கும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் கரூா் தாந்தோணிமலையில் உள்ள முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோயில் கம்பம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறு வழக்கம். இந்நிலையில் வரும் 29-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்க இருந்த நிலையில், கரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவாக கோயில்நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com