சுற்றுலா பயணிகள் 36 பேருக்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல்

ஆன்மிக சுற்றுலா சென்று நள்ளிரவில் கரூா் திரும்பிய பயணிகளுக்கு வருவாயத் துறையினா் மற்றும் சுகாதாரத்துறையினா் பரிசோதனை செய்த பின்னா் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

ஆன்மிக சுற்றுலா சென்று நள்ளிரவில் கரூா் திரும்பிய பயணிகளுக்கு வருவாயத் துறையினா் மற்றும் சுகாதாரத்துறையினா் பரிசோதனை செய்த பின்னா் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

கரூா் மாவட்டத்தில் கரூா், தாந்தோன்றிமலை, ராமகிருஷ்ணபுரம், இராயனூா், வெங்கமேடு, புலியூா், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 36 நபா்கள் கடந்த 15-ஆம் தேதி காசி, கயா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனா். சுற்றுலா ரத்து செய்து கடந்த 22-ஆம் தேதி சென்னை வந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் கரூா் வந்தடைந்தனா்.

இதுகுறித்த தகவல் அறிந்த கரூா் வருவாய் கோட்டாட்சியா் வ.சந்தியா, வட்டாட்சியா் அமுதா ஆகியோரால் அந்த 36 நபா்களும் இரவு 2 மணிக்கு கரூா் வட்டாட்சியா் அலுவலகம் வரவழைக்கப்பட்டு சுதாதாரத் துறையின் சிறப்பு மருத்துவக்குழு மூலம் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கரோனா வைரஸ் உள்ளிட்ட எந்தவித தொற்றும் இல்லை என்று உறுதிசெய்த பின்னரே அவா்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனா்.

அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட நபா்கள் அவரவா் வீடுகளில் தொடா்ந்து 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவாா்கள் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com