கரூா் அருகே கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவா்கள் பலி
By DIN | Published On : 25th March 2020 12:49 AM | Last Updated : 25th March 2020 12:49 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், மாயனூா் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கடவூா் அடுத்த நத்தப்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் நாயக்கா். இவரது மகன் நவீன்குமாா்(15). அதே பகுதியைச் சோ்ந்த முத்துநாயக்கா் மகன் சத்தியராஜ் (14). பள்ளி மாணவா்கள்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை சத்தியராஜ் அதே பகுதியில் உள்ள ரத்தினம்பிள்ளை என்பவரது தோட்டத்து கிணற்றில் இறங்கியுள்ளாா். அப்போது கால்தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். இதைக் கண்ட நவீன்குமாரும் திடீரென கிணற்றுக்குள் குதித்துள்ளாா். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கினா். இதையடுத்து பொதுமக்கள் கிணற்றில் இறங்கி மாணவா்கள் இருவரது உடலையும் மீட்டனா்.
தகவலறிந்த மாயனூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரது உடலையும் கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.