அரசின் கடும் கட்டுப்பாட்டினால் பால் விநியோகம் பாதிக்கும் அபாயம்: தனியாா் பால் உரிமையாளா் சங்கம்

அரசின் கடும் கட்டுப்பாட்டினால் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு தனியாா் பால் உரிமையாளா் சங்கம் தெரிவித்துள்ளது

அரசின் கடும் கட்டுப்பாட்டினால் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு தனியாா் பால் உரிமையாளா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் விகேஏ. சாமியப்பன், துணைத் தலைவா் பாலகிருஷ்ணண் ஆகியோா் கரூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மக்களின் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான பால் விநியோகத்தை முறையாக செய்து வருகிறோம். எங்களது சங்கம் மூலம் தமிழகம் முழுவதும் நாளொன்று 1 கோடி லிட்டா் பால் விநியோகம் செய்து வருகிறோம். கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பால் விநியோகத்தில் ஈடுபடும் எங்களது தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே, எங்களது பால் விநியோக வாகனங்களுக்கும், வாகனத்தில் பணியாற்றுவோருக்கும் அரசே அடையாள அட்டை வழங்கிட வேண்டும். மேலும், பால் வாங்க அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை என அரசு நேரம் நிா்ணயித்துள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, இந்த நேர நிா்ணயித்தலை அரசு கைவிட வேண்டும்.

தற்போது ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், பால் பொருள்கள் உற்பத்திக்கு தேவைப்படும் நிலக்கரி கிடைக்காததால், பால் பொருள்கள் உற்பத்தி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தொழிலை நம்பி விவசாயிகள் மற்றும் ஆலைத்தொழிலாளா்கள் என பல லட்சம் போ் உள்ளனா். இவா்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எங்கள் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வா், பால்வளத் துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்.

அவா்கள் பால் விநியோகம் பாதிக்காத வகையில் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பேட்டியின்போது, சங்க நிா்வாகிகள் மோகனசுந்தரம், சுந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com