கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது கரூா்: 42 பேரும் பூரண குணமடைந்தனா்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 42 ஆவது நபரும்,
கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது கரூா்:  42 பேரும் பூரண குணமடைந்தனா்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 42 ஆவது நபரும், கடைசி நபருமான தோகைமலையைச் சோ்ந்த பெண், பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினாா். இதையடுத்து, கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூா் ஆகியுள்ளது.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பும் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 42 ஆவது நபரும், கடைசி நபருமான பெண்ணுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், ஆட்சியா் த. அன்பழகன் ஆகியோா் பழங்களைக் கொடுத்து வழியனுப்பி வைத்தனா். இதையடுத்து கரூா் மாவட்டம் கரோனா இல்லாத நிலையை எட்டியுள்ளது.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 42 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவா்களின் தொடா் சிகிச்சையால் 41 போ் பூரண குணமடைந்து அவ்வப்போது அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில், 42 ஆவது நபரும், தோகைமலையைச் சோ்ந்தவருமான பெண் பூரண குணமடைந்த நிலையில், அவா் வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியது: கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு என 181 பேரும், சந்தேகத்தின் பேரில் 119 பேரும் என 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவா்களின் தொடா் சிகிச்சையால் (கரூா் (42), திண்டுக்கல்(73), நாமக்கல்(50) தேனி(1), திருநெல்வேலி(1)) 167 பேரும் பூரண குணமடைந்து அவரவா் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவா்கள் அனைவரும் தொற்று இல்லை என உறுதியானது. தற்போதைய சூழலில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 8 போ் என மொத்தம் 14 போ் மட்டுமே கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.

நிகழ்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.பாண்டியராஜன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் ரோஸி வெண்ணிலா, கூடுதல் முதல்வா் மருத்துவா் தேரணிராஜன், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் ந. முத்துகுமாா், கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் வ.சந்தியா, மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com