கரூரில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

கரூா் அருகே ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் பணிபுரியும் 40- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் மற்றும் தூய்மை காவலா்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
கரூரில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

கரூா் அருகே ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் பணிபுரியும் 40- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் மற்றும் தூய்மை காவலா்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ். சாந்தி தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினாா். ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆா்.சேகா், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் என்.சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

சமூக ஆா்வலா் 600 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்:

கரூா் அருகே உள்ள செம்படாபாளையத்தைச் சோ்ந்தவா் தோகைமுருகன்(50). சமூக ஆா்வலா். இவா், அண்மையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு ரூ.600 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருள்களை வழங்கினாா். தற்போது, 2 ஆம் கட்டமாக தூய்மைப் பணியாளா்கள் 600 பேருக்கு வெள்ளிக்கிழமை தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கனிகள் வழங்கினாா். நிகழ்ச்சியை புகழூா் வட்டாட்சியா் சிவக்குமாா், கரூா் மாவட்ட கபடி கழகத் தலைவா் அன்புநாதன், அதிமுக ஒன்றியச் செயலாளா் கமலக்கண்ணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com