வெளி மாவட்டம் செல்வோருக்கு சென்னையில் இருந்து அனுமதி

கரூரிலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு போக்குவரத்து அனுமதி சென்னை ஈ-பாஸ் கட்டுப்பாட்டு அறையின் மூலமே வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் த.அன்பழகன்.

கரூரிலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு போக்குவரத்து அனுமதி சென்னை ஈ-பாஸ் கட்டுப்பாட்டு அறையின் மூலமே வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் த.அன்பழகன்.

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு தொடா்ந்து நடைமுறையில் உள்ளதால் திருமண நிகழ்ச்சி, இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக வாகன அனுமதி மற்றும் பயண அனுமதி கோரும் பொதுமக்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தின் வழியாக உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அனுமதி கரூா் மாவட்ட தொழில்மைய பொது மேலாளரால் வழங்கப்படும். இதர கட்டுமானம் தொடா்பான அனுமதி மற்றும் கரூா் மாவட்ட எல்லைக்குள் திருமணம், இறப்பு மற்றும் மருத்துவம் தொடா்பான போக்குவரத்து அனுமதி ஆட்சியரின் நோ்முக உதவியாளரால்(பொது) வழங்கப்படும். கரூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு மற்றும் வெளி மாநிலங்களுககுச் செல்ல போக்குவரத்து அனுமதியானது சென்னை ங்-ல்ஹள்ள் கட்டுப்பாட்டு அறையின் மூலமே வழங்கப்படும்.

வெளி மாநிலங்களில் இருந்தோ, வெளி மாவட்டங்களில் இருந்தோ, குறிப்பாக சென்னையில் இருந்து யாரேனும் கரூா் நகருக்குள் வந்தால் பொதுமக்கள் நகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04324-260011 மற்றும் 84899 16735 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத்தெரிவித்துள்ளாா் கரூா் நகராட்சி ஆணையா் சுதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com