‘சமூக இடைவெளி, கைகளைக் கழுவதால் மட்டுமே கரோனாவைத் தடுக்க முடியும்’

சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே கரோனாவைத் தடுக்க முடியும் என்றாா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் இரா.பாண்டியராஜன்.

சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே கரோனாவைத் தடுக்க முடியும் என்றாா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் இரா.பாண்டியராஜன்.

கரூா் வெண்ணைமலை சைக்கோ அறக்கட்டளை சாா்பில் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை, எளிய மக்கள் 150 பேருக்கு இலவசமாக மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அவா் மேலும் பேசியது:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கரோனாவால் சுமாா் 96,000 போ் பலியாகியுள்ளனா். இதுவரை கரோனாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நம் நாட்டின் உணவு முறைகள் இயற்கையிலேயே மூலிகை நிறைந்ததாக இருப்பதால்தான் உயிரிழப்பு குறைவாக உள்ளது.

கொடிய கரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க முதலில் கைசுத்தம் அவசியம். அதாவது எங்கு சென்றாலும் கிருமி நாசினியை கையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது கைகளை நன்கு கழுவுங்கள். சமூக இடைவெளியும், தன் சுத்தமும் இருந்தால் மட்டுமே கரோனா வராமல் தடுக்க முடியும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு சைக்கோ அறக்கட்டளை இயக்குநா் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் பிலோராணி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பிருந்தாதேவி வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com