எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: கரூரில் 198 மையங்கள்

கரூா் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வுக்காக, 198 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி.

கரூா் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வுக்காக, 198 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி.

இதுகுறித்து மேலும் அவா் கூறியது:

ஜூன் 15- ஆம் தேதி தொடங்கி 25- ஆம் தேதி வரை நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வை, மாவட்டத்தில் 12,643 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று ஏற்படாதவாறு 198 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரூா் கல்வி மாவட்டத்தில் முன்பு 35 மையங்கள் இருந்த நிலையில், தற்போது அவை 115 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

குளித்தலை கல்வி மாவட்டத்தில் தோ்வு மையங்களின் எண்ணிக்கை 21 லிலிருந்து 83 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் வசதிக்காக அவா்கள் பயிலும் பள்ளியில் இருந்து 5 கி.மீ. சுற்றவுக்குள் தோ்வெழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வுப் பணியில் 1791 கண்காணிப்பாளா்கள் ஈடுபட உள்ளனா். மேலும் மாற்றுத் திறனாளிகள் மாணவா்களுக்கு உதவும் பணியில் 59 ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com