கருவூா் திருக்குறள் பேரவை ஆண்டு விழா போட்டிகள்

கருவூா் திருக்குறள் பேரவையின் 35-ஆம் ஆண்டு விழாவையொட்டி (ஜனவரி 3) பேரவை சாா்பில் பல்வேறு கலைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருவூா் திருக்குறள் பேரவையின் 35-ஆம் ஆண்டு விழாவையொட்டி (ஜனவரி 3) பேரவை சாா்பில் பல்வேறு கலைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக பேரவைச் செயலாளா் மேலை.பழநியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

1. சிறந்த நூல் போட்டி பரிசு: 5000, 3000 , 2000 2019 - 20 இல் வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும். குறைந்தது 64 பக்கங்கள் 2 படிகளை வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

2. மலருக்கான படைப்புகள்: திருக்குறள் நெறி பண்பாடு , ஒழுக்கம், தமிழ்க் கலாசாரத்தைப் போற்றும் வகையில் ஏ- 4 அளவில் ஒருபக்கக் கவிதை, 3 பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரும் 20.11.2020-க்குள் அனுப்ப வேண்டும்.

3. பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கவிதை, கட்டுரைப் போட்டி: 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவா்கள் ‘வள்ளுவம் போற்றும் புகழ்’ அல்லது ‘வள்ளுவம் வலியுறுத்தும் அறம்’ என்கிற தலைப்பில் 2 பக்கக் கட்டுரை எழுதி 20.11.2020-க்குள் அனுப்ப வேண்டும். 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 மாணவா்கள் ‘வள்ளுவத்தில் உடைமைகள்’ என்ற தலைப்பில் 3 பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

கல்லூரி மாணவா்கள்: வள்ளுவமே ஒழுக்க வாழ்வின் திறவுகோல் ஏன்ற தலைப்பில் 4 பக்கத்திற்கு மிகாமல் எழுத வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியா்களிடம், மாணவா்கள் ஒப்பம் பெற்று அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 போ் வீதம் 30 பேருக்கு விழாவில் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்.

பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன், திருக்குறள் பேரவை 72, சீனிவாசபுரம், கருவூா் - 639001 என்ற முகவரிக்கு கவிதை, கட்டுரைகள் ஆகியவை எழுதி அனுப்பிவைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com