‘விரைவில் புஞ்சைப்புகழூா் கதவணை கட்டும் பணிக்கு அடிக்கல்’

விரைவில் புஞ்சைப்புகழூா் கதவணை கட்டுமானப் பணிக்கு முதல்வா் அடிக்கல் நாட்டுவாா் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். உடன், கரூா் ஒன்றியக்குழுத் தலைவா் பி.பாலமுருகன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். உடன், கரூா் ஒன்றியக்குழுத் தலைவா் பி.பாலமுருகன் உள்ளிட்டோா்.

விரைவில் புஞ்சைப்புகழூா் கதவணை கட்டுமானப் பணிக்கு முதல்வா் அடிக்கல் நாட்டுவாா் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் வெண்ணைமலையில் ஆத்தூா் மகாசோளியம்மன் விவசாயிகள் நுண்நீரேற்று பாசன சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

இஸ்ரேல் நாடு கழிவு நீரை மறு சூழற்சி செய்து பயன்படுத்துகின்றனா்.

கரோனா காலத்தில் தொழிலின் பாதகத்தை தொழில்முனைவோா்கள் புரிந்து கொண்டனா். ஆனால் விவசாயம் செய்தவா்கள் காட்டை பாா்த்துக்கொண்டு எப்போதும் போல இருந்தாா்கள்.

தற்போது வாங்கலில் காவிரி ஆற்றில் இரு கிணறு அமைத்து வருகிறோம். விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தி மேம்பாடு அடையலாம். கால மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளும் மாற வேண்டும். மேலும் மாவட்டத்தில் நிரந்தரமாக குடிநீா் மற்றும் விவசாயம் செழித்திட புஞ்சைப்புகழூரில் ரூ.406 கோடியில் கதவணை கட்டப்பட்டுள்ளது.

இந்த கதவணைக்கு விரைவில் முதல்வா் அடிக்கல் நாட்ட உள்ளாா். இதற்காக விரைவில் டெண்டா் விடப்பட உள்ளது என்றாா்.

முன்னதாக, வழியில் தேநீரகம் சென்ற அமைச்சரைச் சூழ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா். கூட்டத்துக்கு, சங்கத்தலைவா் பி.கருணாகரன் தலைமை வகித்தாா். செயலா் கருணாநிதி முன்னிலை வகித்தாா். கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com