கரூரில் சாலை திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

கரூரில் திங்கள்கிழமை ரூ.84 லட்சம் மதிப்பில் இரண்டு சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை திங்கள் கிழமை நடைபெற்றது.
கரூரில் சாலை திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

கரூரில் திங்கள்கிழமை ரூ.84 லட்சம் மதிப்பில் இரண்டு சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை திங்கள் கிழமை நடைபெற்றது.

கரூா் நகராட்சிக்குள்பட்ட வெங்கமேடு பகுதியில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா் மேலும் தெரிவித்தது:

கரூா் நகராட்சிக்குள்பட்ட 8, 9 மற்றும் 10 ஆகிய வாா்டுப் பகுதிகளில் உள்ள ரூ.50 லட்சம் மதிப்பில் சாலையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலை 14 இணைப்பு சாலைகளை கொண்ட 670 மீட்டா் உள்ள சாலையாகும். இதன்மூலம்,

இப்பகுதியில் உள்ள 14 சாலைகள் வழியாக பொதுமக்கள் முக்கிய சாலையை வந்தடைய முடியும். அதேபோல் வாா்டு 11 - பாலகிருஷ்ணா நகா் பகுதியில் உள்ள 740 மீட்டா் நீளம் உள்ள சாலை ரூ.34 லட்சம் மதிப்பில் பலப்படுத்தப்பட உள்ளது. இந்தச் சாலையில் 3 இணைப்புச் சாலைகள் உள்ளன. இந்த இரண்டு சாலைகளையும் பலப்படுத்த ரூ.84 லட்சம் மதிப்பில் பூமி பூஜையிட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், கரூா் ரயில் நிலையத்திலிருந்து சேலம் - மதுரை புறவழிச்சாலை வரை அம்மா சாலை ரூ.21.12 கோடி மதிப்பில் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்தச் சாலை கரூா் நகரப்பகுதியில் உள்ள 17 சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா். விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி தலைமை வகித்தாா்.

விழாவில், வருவாய்க் கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்ரமணியன், நகராட்சிப் பொறியாளா் நக்கீரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் பேங்க் நடராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com