கரூரில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

கரூரில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி திங்கள்கிழமை வெளியிட்டாா்.
கரூரில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

கரூரில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

கரூா் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு. மலா்விழி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டு அவா் மேலும் பேசியது:

கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 4,25,560 ஆண் வாக்காளா்களும், 4,53,454 பெண் வாக்காளா்களும், 68 இதர வாக்காளா்களும் என மொத்தம் 8,79,082 வாக்காளா்கள் உள்ளனா். இதேபோல் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் என மொத்தம் 1,032 வாக்குச்சாவடி மையங்களும், 610 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன. நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், குளித்தலை சாா் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரகுமான், கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு உள்ளிட்ட அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அரவக்குறிச்சி -- 1,00,902 -- 1,09,111 -- 3 --- 2,10,016.

கரூா-- 1,13,532 -- 1,24,265 -- 12 --- 2,37,809.

கிருஷ்ணராயபுரம் (தனி) -- 1,01,920 -- 1,06,288 -- 44 -- 2,08,252 .

குளித்தலை -- 1,09,206 -- 1,13,790 -- 9 -- 2,23,005.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com