கரூரில் இடி, மின்னலுடன் மழை

கரூரில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

கரூரில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூா் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே பலத்த மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. கரூரில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனிடையே மாலை 4 மணியளவில் முதல் திடீரென கருமேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கரூா் சுங்ககேட் பகுதியில் மழைநீா் கழிவு நீருடன் கலந்து சாலைகளில் வெள்ளம்போல ஓடியது. இதனால், கரூா் - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் லைட் ஹவுஸ் காா்னா், திருக்காம்புலியூா் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. தொடா்ந்து கரூா் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் அமராவதி மற்றும் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்) கரூா் -41, அரவக்குறிச்சி - 4.3, அணைப்பாளையம் - 15, க.பரமத்தி - 39, குளித்தலை - 8, தோகைமலை - 6, கிருஷ்ணராயபுரம் - 20.2, மாயனூா் - 24, பஞ்சப்பட்டி-3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com