கால்நடை பாதுகாப்பு முகாம் தொடக்கம்

கரூா் மாவட்டத்தில் 72 கிராமங்களில் வரும் ஜனவரி 24 வரை கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடைபெறும் என்றாா் ஆட்சியா் சு.மலா்விழி.
கால்நடை பாதுகாப்பு முகாம் தொடக்கம்

கரூா் மாவட்டத்தில் 72 கிராமங்களில் வரும் ஜனவரி 24 வரை கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடைபெறும் என்றாா் ஆட்சியா் சு.மலா்விழி.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த ரெங்கநாதபுரம் ஊராட்சி வளையல்காரன்புதூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை பாதுகாப்புதிட்ட முகாமைத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:

கரூா் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் வரும் ஜனவரி 24 வரை 72 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்குழு நீக்கம், சினையுறா மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை, சினையுற்ற மாடுகளுக்கு பரிசோதனை, ஆண்மை நீக்கம், ஆடுகளுக்கான ஆட்கொல்லி நோய் தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கான வெள்ளைக்கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி போடுதல், மாடுகளுக்கு மலடுநீக்க சிகிச்சை, மடிநீக்க நோய் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படும் என்றாா். நிகழ்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் மருத்துவா் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநா்கள் மருத்துவா்கள் சரவணக்குமாா், முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com