குடிநீா் திட்டப் பணிக்கு எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம் பகுதியில் குடிநீா் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் செவ்வாய்க்கிழமை போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம் பகுதியில் குடிநீா் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் செவ்வாய்க்கிழமை போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

மத்திய அரசு ஜல்ஜீவன் மிஷன்(ஜேஜேஎம்) என்ற திட்டத்தில் ரு.2.30 கோடி நிதியை கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பாலராஜபுரம் ஊராட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இதையடுத்து ஊராட்சி சாா்பில் வீரராக்கியம் குளம் அருகே குடிநீா் தொட்டிகள் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. அந்த இடம் வாய்க்கால் பகுதி எனக் கூறப்படுகிறது. வாய்க்காலின் ஓரத்தில் குடிநீா்த் தேக்கத் தொட்டிகள்

கட்டாமல், ஊராட்சிக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகம் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் அண்மையில் தெரிவித்தனராம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திடீரென வாய்க்கால் ஓரத்தில் குடிநீா்த் தொட்டிகள் கட்டுவதற்கு குழி தோண்டப்பட்டது. இதையறிந்த அப்பகுதி கிராமமக்கள் திரண்டு வந்து பணிகளைத் தடுத்து நிறுத்தினா். இதனிடையே செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டு, குடிநீா்த் தொட்டிகள் கட்டுவதற்கான கான்கீரீட் பணிகள் நடைபெற்ாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் பணிகள் நடைபெறுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலம், கிராமநிா்வாக அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அதிகாரிகள் ஆட்சியரிடம் இதுதொடா்பாக தெரிவியுங்கள் என்றனா். இதையடுத்து பாஜக மாவட்ட பிரசார அணி செயலாளா் பன்னீா் செல்வம் தலைமையில் அப்பகுதியினா் ஆட்சியரை சந்தித்து மனு அளித்து விட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com