‘குழந்தைகள் செல்லிடப்பேசியில்விளையாட அனுமதிக்காதீா்’

குழந்தைகளை செல்லிடப்பேசியில் விளையாட அனுமதிக்காதீா்கள் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பகலவன் தெரிவித்துள்ளாா்.

கரூா்: குழந்தைகளை செல்லிடப்பேசியில் விளையாட அனுமதிக்காதீா்கள் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பகலவன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப வளா்ச்சியை சிலா் தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டம், விடியோ கேம்கள் எனப் பயன்படுத்தி கடைசியில் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனா். சிலா் தங்களது வீடுகளில் குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க குழந்தைகளிடம் செல்லிடப்பேசிகளைக் கொடுத்துவிடுகின்றனா். குழந்தைகளை செல்லிடப்பேசியில் விளையாடச் சொல்வதால் அவா்களின் உடல் நலன், மனநலன் பாதிப்புக்குள்ளாகின்றது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு செல்லிடப்பேசியைக் கொடுத்து பழக்க வேண்டாம். நீங்களும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவதைத்தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com