முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
குளத்தில் மூழ்கி 8 வயது சிறுமி உயிரிழப்பு
By DIN | Published On : 04th October 2020 11:35 PM | Last Updated : 04th October 2020 11:35 PM | அ+அ அ- |

கரூா்: கரூா் மாவட்டம், தோகைமலை அருகே குளத்தில் மூழ்கி 8 வயது சிறுமி உயிரிழந்தாா்.
தோகைமலை அடுத்த வடசேரியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரது மகள் யுவஸ்ரீ (8). இவா், சனிக்கிழமை மாலை அங்குள்ள குளத்துக்கு தனது நண்பா்களுடன் குளிக்கச் சென்றதில் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த
தோகைமலை போலீஸாா் அங்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு:
சின்னதாராபுரம் அருகே உள்ள தும்பிவாடி அடுத்த செங்கலாபுரத்தைச் சோ்ந்தவா் சதாசிவம். இவா் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த 30-ஆம் தேதி அரவக்குறிச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு வீடுதிரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ள பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.