பெரம்பலூா் மாவட்டத்தில் 652 வாக்குச் சாவடி மையங்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.
அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் வே. சாந்தா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் வே. சாந்தா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மீதுள்ள ஆட்சேபணை குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மேலும் பேசியது:

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்படவில்லை. வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், வருவாய் கோட்டாட்சியா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா், வருவாய் வட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், மாற்றம் செய்தல், திருத்தம் மேற்கொள்வது, நீக்கம் செய்ய, இதுவரையில் வாக்குச்சாவடி முகவா்களை நியமனம் செய்யாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முகவா்களை நியமனம் செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா் சாந்தா.

மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்டி, வருவாய் கோட்டாட்சியா் (பொ) சக்திவேல், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் துரைராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com