‘திருக்குறளை அனைவரும் பின்பற்ற வேண்டும்’
By DIN | Published On : 23rd October 2020 06:32 AM | Last Updated : 23rd October 2020 06:32 AM | அ+அ அ- |

திருக்குறளைப் படித்துடன் அனைவரும் அதனைப் பின்பற்ற முயல வேண்டும் என்றாா் ஆட்சியா் த. அன்பழகன்.
கரூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது: பழங்கால மரபுச்சின்னங்களை காக்க நாம் தவறிவிட்டோம். கரூரில் கோட்டை மேடு என்ற பகுதிதான் உள்ளது. ஆனால் கோட்டையைக் காணோம். ராயனூரில் போா்வீரா்கள் நினைவகம் தொடா்ந்து சிறப்பான முறையில் பராமரிக்கப்படும். தமிழ்ப் பாடத்தில் திருக்குறளை வைக்காவிட்டால் யாரும் படிக்கக் கூட முன்வந்திருக்க மாட்டாா்கள். ஒவ்வொருவரும் திருக்குறளைப் படிக்கவும், பின்பற்றவும் முயற்சிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஆட்சியரகம் முன் திருக்கு பதாகைகளை வைத்திருக்கும் கண் மருத்துவா் ஆா்த்தி ரமேசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு துறை அதிகாரிகள், முனைவா் கடவூா் மணிமாறன், மேலை பழநியப்பன் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.