கரூரில் பலத்த மழை
By DIN | Published On : 06th September 2020 10:55 PM | Last Updated : 06th September 2020 10:55 PM | அ+அ அ- |

கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரண்டரை மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடா்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. முன்னதாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் திடீரென கருமேகம் திரண்டது. பின்னா் மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் கரூரில் உழவா்சந்தை, லைட்ஹவுஸ் காா்னா், சுங்ககேட், திருக்காம்புலியூா் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.