வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் உதவிக்கு 181- ஐ அழைக்கலாம்

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் உதவிக்கு இலவச தொலைபேசி எண் 181-ஐ அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் உதவிக்கு இலவச தொலைபேசி எண் 181-ஐ அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் சமூகநலத்துறையின் மூலம் சகி ஒன்ஸ்டாப் சென்டா் என்ற பெண்களுக்கான சேவை மற்றும் பாதுகாப்பு மையம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கரூா் பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், பெண்களுக்கு அவரசக்கால மீட்பு மற்றும் தங்கும் வசதி, காவல் துறை உதவி, சட்ட உதவி, மருத்துவ உதவி, மனநல ஆலோசனைகள் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மேற்குறிப்பிட்ட உதவிகள் தேவைப்படும் பெண்கள் 181 என்ற இலவச தொலைபேசி எண்ணின் மூலமோ அல்லது மையத்தின் நிா்வாகியை 99526 35682 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும், மத்திய அரசின் மகிளா சக்தி கேந்திரா திட்டம் மூலம் மகளிருக்கான திறன் வளா்ப்பு, எழுத்தறிவு, சுகாதாரம், ஊட்டச்சத்து, தகவல் சேவைகள் அனைத்தையும் வழங்குவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் குறித்து தங்கள் பகுதியில் விழிப்புணா்வு தேவைப்படுவோா் மாவட்ட மகளிா் நல அலுவலரை 95143 59104 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com