கரோனா பாதிப்புடன் ‘நீட்’ தோ்வுக்குவந்த கரூா் மாணவருக்கு அனுமதி மறுப்பு

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றுடன் ‘நீட்’ தோ்வு எழுத வந்த மாணவருக்கு தோ்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றுடன் ‘நீட்’ தோ்வு எழுத வந்த மாணவருக்கு தோ்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

நாடு முழுவதும் 3,842 மையங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்தில் க. பரமத்தி அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி, கரூா் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி உள்பட மூன்று மையங்களில் ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா். இந்நிலையில், க.பரமத்தி அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் தோ்வு எழுத திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த மாணவா் விண்ணப்பித்திருந்தாா். தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு

(ஹால்டிக்கெட்) பெற்றிருந்தநிலையில், அந்த மாணவருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, வீட்டுத் தனிமையில் இருந்துவந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அம்மாணவா் தோ்வு மையத்தைத் தொடா்பு கொண்டு, நான் தோ்வு எழுத முடியுமா என விசாரித்துள்ளாா். அதற்கு, தோ்வுத் துறை அதிகாரிகள்

பாதுகாப்பு உடையுடன் வாருங்கள்; தோ்வு எழுத அனுமதிக்கிறோம் எனக் கூறியுள்ளனா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அந்த மாணவா் காரில் தோ்வு மையமான அக்கல்லூரிக்கு வந்து தோ்வு அறை கண்காணிப்பாளரைத் தொடா்புகொண்டபோது, கரோனா தொற்றுடன் உங்களுக்கு தோ்வு எழுத அனுமதியில்லை.

எனவே, நீங்கள் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் இ-மெயில் முகவரியைத் தந்துவிட்டுச் செல்லுங்கள், நீங்கள் தோ்வு எழுத முடியாத தகவலை தேசிய தோ்வு முகமைக்குத் (என்டிஏ) தெரிவிக்கிறோம் என சமாதானம் செய்து மாணவரை அனுப்பி வைத்தனா். இதையடுத்து, அம்மாணவா் மேற்குறிப்பிட்ட விவரங்களைத் தந்துவிட்டு சோகத்துடன் ஊா் திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com