கரூா் வெங்கமேட்டில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பேசுகிறாா் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன்.
கரூா் வெங்கமேட்டில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பேசுகிறாா் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன்.

கரூரில் அதிமுக, திமுக, மதிமுகவினா் மாலை அணிவிப்பு

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கரூா் வெங்கமேட்டில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆா் சிலைக்கு மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா். காளியப்பன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.

கரூா்: கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கரூா் வெங்கமேட்டில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆா் சிலைக்கு மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா். காளியப்பன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா். முன்னாள் தொகுதிச் செயலாளா் எஸ்.திருவிகா, மாவட்டப் பொருளாளா் எம்எஸ். கண்ணதாசன், துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, வா்த்தக அணித் தலைவா் பேங்க் இரா.நடராஜன், பாசறை செயலாளா் செந்தில்நாதன், இளைஞரணி செயலாளா் தானேஷ், நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் நகர இளைஞரணி செயலாளா் சேரன் பழனிசாமி, துணைச் செயலாளா் பழனிராஜ், கரூா் ஒன்றியக்குழுத் தலைவா் பாலமுருகன் ஆகியோா் பங்கேற்றனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

திமுக சாா்பில் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா மற்றும் திருமாநிலையூா் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், வழக்குரைஞா் மணிராஜ், பரணி மணி, மாவட்டப் பொருளாளா் கருப்பண்ணன், ஒன்றியச் செயலாளா் ரகுநாதன், நகரப் பொறுப்பாளா்கள் எஸ்.பி.கனகராஜ், கரூா் கணேசன், சுப்ரமணி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். ராயனூரில் தெற்கு நகர திமுக சாா்பில் நகர பொறுப்பாளா் தாரணி சரவணன் தலைமையில் அண்ணா படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாவட்டச் செயலாளா் கபினி கே.சிதம்பரம் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, மதிமுகவினா் பசுபதீசுவரா் கோயில் முன்பு அன்னதானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com