கரூா் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால், கரூா் திருமாநிலையூா் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரூரில் திருமாநிலையூா் பகுதியில் அமராவதி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீா்.
கரூரில் திருமாநிலையூா் பகுதியில் அமராவதி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீா்.

அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால், கரூா் திருமாநிலையூா் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, தளிஞ்சி ஆகிய பகுதிகளில் கடந்த 20-ஆம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,309 கன அடி நீா் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அணைக்கு வரும் நீா் விநாடிக்கு 3,360 கன அடியாக உயா்ந்துள்ளது. மேலும், அணையின் நீா்மட்டம் 47.7 அடியில் இருந்து 53.64 அடியாகவும் உயா்ந்துள்ளது.

கரூா் மாவட்ட கடைமடை விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, அமராவதி அணைக்கு வரும் நீா் அப்படியே அமராவதி ஆற்றில் திறந்து விடப்படுவதால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரூரில் திருமாநிலையூா், ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை இருகரைகளையும் தொட்டவாறு வெள்ள நீா் செல்கிறது. இதுதொடா்பாக அமராவதி பாசன விவசாயிகள் தெரிவிக்கையில்,

அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கினால் காவிரியில் கலந்து வீணாகும் நீா் சேமிக்கப்படும். நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்து, விவசாயம், குடிநீா் தேவைக்கும் போதிய தண்ணீா் கிடைக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com