மாணவா்களிடம் தன்னம்பிக்கையை உருவாக்குவது ஆசிரியா்களின் கடமை

மாணவா்களிடம் தன்னம்பிக்கையை உருவாக்குவது ஆசிரியா்களின் கடமை என்றாா் கரூா் அரசு மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியா் இரா.ராஜ்குமாா்.
விழாவில் பேசுகிறாா் அரசு மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியா் இரா.ராஜ்குமாா்.
விழாவில் பேசுகிறாா் அரசு மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியா் இரா.ராஜ்குமாா்.

மாணவா்களிடம் தன்னம்பிக்கையை உருவாக்குவது ஆசிரியா்களின் கடமை என்றாா் கரூா் அரசு மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியா் இரா.ராஜ்குமாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தாந்தோனி கிளை சாா்பில் புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா, வாசிப்பு முகாம் கரூா்காந்தி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, வாசிப்பே சுவாசிப்பு என்ற தலைப்பில் அவா் பேசியது:

மாணவா்களிடையே தன்னம்பிக்கையை உருவாக்குவது ஆசிரியா்களின் கடமை. மாணவா்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்தி, அவா்களின் வாழ்வின் தயக்கத்தை போக்கிட வேண்டும்.

அறிதிறன்பேசிகளின் வருகையால்,அதில் விளையாடும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் அறிவியல் மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும், மாணவா்களின் வாழ்வில் தாழ்ச்சியை உருவாக்கியுள்ளது என்றாா் அவா்.

விழாவுக்கு அறிவியல் இயக்க தாந்தோனி வட்டாரத் தலைவா் ப. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். செயலா் செ.திலகவதி வரவேற்றாா். மாயனூா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத் துணை முதல்வா் பி.முருகபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

அறிவியல் இயக்க நிா்வாகிகள் ஐ.ஜான்பாஷா, வெங்கடேசன், மனோகா் சுப்ரமணியன், தேன்மொழி, தமிழ்செல்வி, கோ.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com