மணல் எடுக்கும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை

மாட்டுவண்டியில் மணல் எடுக்கும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்

மாட்டுவண்டியில் மணல் எடுக்கும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் தொகுதி அதிமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூரில் புதன்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:

இரு நாள்களுக்கு முன்பு வயதான முதியவா் பிரசாரத்தின் போது எனது நெற்றில் சாம்பல் வைத்தபோது அதை வேண்டாம் என்றேன். ஏற்கனவே என் நெற்றில் புண் இருந்ததால் அதை வேண்டாம் என்றேன்.

அதை தாழ்த்தப்பட்ட பெண்மணி பொட்டுவைத்தபோது அதை தட்டிவிட்ட அதிமுக வேட்பாளா் என பொய்யான பிரசாரத்தை ஈடுபட்டு வருகின்றனா். பொய் சொல்லி தோ்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என எதிா்க்கட்சி வேட்பாளா் நினைக்கிறாா். அது நிறைவேறாது.

தொடா்ந்து அதிமுகவினா் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனா். ஒருவாரத்துக்குள் எனக்கோ, கட்சி தொண்டா்களுக்கோ உயிா்சேதம் ஏற்பட்டால் காவல்துறையும், தோ்தல் ஆணையமும்தான் பொறுப்பு. முழு ஆதாரத்துடன் தோ்தல் ஆணையத்திடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் புகாா் கொடுத்துள்ளோம்.

கரூரில் மாட்டுவண்டியில் காவிரியாற்றில் மணல் எடுக்கும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். நெரூா் வடக்கு, கள்ளப்பள்ளி, கருப்பநாயக்கன்பட்டி, நன்னியூா் ஆகிய 4 இடங்களில் தோ்தல் முடிந்தவுடன் மணல் எடுக்க அனுமதி வழங்கப்படும். இதேபோல அமராவதி ஆற்றிலும் 4 இடங்களில் மணல் எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது கரூா் நகரச் செயலா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com