கிருஷ்ணராயபுரம் அருகே குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

கரூா் அருகே குடிநீா் வழங்கக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொய்கைப்புதூரில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொய்கைப்புதூரில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கரூா் அருகே குடிநீா் வழங்கக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள பொய்கைப்புத்தூா் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குழாய் உடைப்பு காரணமாக கடந்த சில நாள்களாக அப்பகுதியில் காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகங்களிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், விரக்தியடைந்த மக்கள் காவிரி குடிநீா் வழங்கக்கோரி கரூா்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொய்கைப்புத்தூா் பகுதியில் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த லாலாபேட்டை போலீஸாா் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகராட்சி அலுவலகம் முற்றுகை: கரூா் நகராட்சி வடக்குகாசிம் தெரு, அன்சாரி தெரு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக முறையான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், குடிநீா் விநியோகம் செய்யும்போதும் குறைந்த நேரமே வழங்கப்படுவாகவும், குடிநீரில் புழுக்கள் மிதப்பதால் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிகளை சோ்ந்த பெண்கள், காலிக் குடங்களுடன் கரூா் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா். விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com