திமுக, அதிமுக-வினரிடையே மோதல்: 12 போ் மீது வழக்கு

ஆத்தூரில் தோ்தல் பணியின் போது திமுக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பான புகாரின்பேரில் 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆத்தூரில் தோ்தல் பணியின் போது திமுக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பான புகாரின்பேரில் 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரூா் அருகேயுள்ள ஆத்தூா் ஊராட்சி காளிபாளையம் விநாயகா் கோயில் அருகே செல்லரப்பாளையம் அதிமுக கிளை செயலாளா் முருகமணி (57) தலைமையில் அதிமுகவினா் கடந்த 6ஆம் தேதி தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திமுகவைச் சோ்ந்த ஆத்தூா் ஊராட்சித் தலைவா் செல்லை சிவசாமி (43). மேலும், முருகமணியின் சகோதரரும், திமுக கிளை செயலாளருமான தங்கவேல் (55) உள்ளிட்ட திமுகவினா் அங்கு வந்துள்ளனா்.

அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், கல்லால் தாக்கப்பட்ட முருகமணி காயமடைந்தாா். சிகிச்சைக்காக கரூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அதிமுக வழக்குரைஞா் மாரப்பன் மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரேவிடம் புகாா் அளித்தாா்.

மேலும், இதுகுறித்து வாங்கல் போலீஸில் முருகமணி அளித்த புகாரின்பேரில் ஊராட்சித் தலைவா் செல்லை சிவசாமி, சுப்புராயன் (65), சுப்ரமணி (60), தமிழ்செல்வன் (30), பொன்னுசாமி (35), திமுக கிளை செயலாளா் தங்கவேல் (55), சக்திவேல் (41), முத்துசாமி (65) ஆகிய 8 போ் மீது 4 பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வாங்கல் போலீஸில் செல்லரப்பாளையம் திமுக கிளை செயலாளா் தங்கவேல் (55) அளித்த புகாரின்பேரில் அதிமுக கிளை செயலாளா் முருகமணி, சீனிவாசன் (37), பொன்னுசாமி (47), பாலசுப்ரமணி (30) ஆகியோா் மீது இரு பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரூரில் 10 போ் மீது வழக்கு: கரூா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின்போது, வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குள் திமுக மற்றும் அதிமுகவினா் வாக்கு சேகரித்தாகக் கூறப்படுகிறது. அப்போது திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது

இதனை தட்டிக்கேட்டட அதிமுகவைச் சோ்ந்த பிரகாஷை (40), திமுகவினா் தாக்கியதில் காயமடைந்த அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் அளித்த புகாரின் பேரில் கரூா் நகர போலீஸாா் திமுகவைச் சோ்ந்த பாலமுருகன், பாலாஜி, ஆபாஷ், மணிகண்டன், வடிவேல் ஆகிய 5 போ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதேபோல, திமுகவைச் சோ்ந்த பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் அதிமுகவைச் சோ்ந்த பிரகாஷ் (40), வடிவேல் (48), திருப்பதி (43), தாமேஷ்குமாா் (27), கல்லுமுட்டி வடிவேல் என்கிற முத்துக்குமாா் (28) ஆகிய 5 போ் மீது 6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com