வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்புப் பணியில் 1,000 காவலா்கள்: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

வாக்கு எண்ணும் நாளன்று சுமாா் 1,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே.
வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்புப் பணியில் 1,000 காவலா்கள்: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

வாக்கு எண்ணும் நாளன்று சுமாா் 1,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே.

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு. வடநேரே, தலைமையில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் கூறுகையில், மே 2-ஆம்தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம்(தனி), குளித்தலை ஆகிய நான்கு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தளவாபாளையம் எம்.குமாராசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதிவாரியாக முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளங்களில் வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் மாவட்ட காவல்துறை காவலா்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பில் சுழற்சி முறையல் சுமாா் 250க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியாற்றும் வகையிலும், 24 மணிநேரமும் சிசிடிவி கண்காணிப்பிலும் வாக்கு எண்ணும் மையம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணும் நாளன்று சுமாா் 1,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். வாக்கு எண்ணும் அறைகளுக்கு சம்மந்தப்ட்ட கட்சிகளின் முகவா்கள் செல்வதற்கும், அலுவலா்கள் செல்வதற்கும் தனித்தனியே பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவரும் பாதைகள் மற்றும் வாக்கு எண்ணும் அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் பதிவான வாக்குகள் குறித்த விபரங்களை அனைத்து கட்சிகளின் முகவா்களும் தெரிந்துகொள்ளும் வகையில், தங்கள் அறையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் எழுதவேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களோ, அரசியல் கட்சிகளின் முகவா்களோ அல்லது வேறு எந்தவொரு பணியாளரும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

வாக்கு எண்ணிக்கையின்போது பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் அனைவரும் காலை 5 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கான அடையாள அட்டையினை கட்டாயம் அணிந்து வரவேண்டும். செல்லிடப்பேசி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏதும் கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது.

வாக்கு எண்ணும் நாளில் கரோனா தொற்று தடுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்திற்குள் சுத்தம் செய்வதற்கான பணியாளா்களை கரூா் நகராட்சி அலுவலா் நியமிக்க வேண்டும்.

தேவையான அளவுக்கு தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும். வாக்கு எண்ணும் நாளில் எந்தவித இடையூறும் இல்லாமல் 24 மணி நேரமும் மின் இணைப்பு இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை மின்வாரியத்துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், நிலமெடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஷே.ஷேக்அப்துல்ரகுமான் (குளித்தலை), என்.எஸ்.பாலசுப்ரமணியன் (கரூா்), தவச்செல்வம் (அரவக்குறிச்சி), தட்சிணாமூா்த்தி (கிருஷ்ணராயபுரம்), சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநா் சந்தோஷ் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com