கரூா் மாவட்டத்தில்டாஸ்மாக் கடைகள் மூடல்
By DIN | Published On : 27th April 2021 03:49 AM | Last Updated : 27th April 2021 03:49 AM | அ+அ அ- |

கரூா்: கரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து கரூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் மதுபான கூடங்களில் மது விற்பனை நடைபெறாது. மீறி விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு .வடநேரே தெரிவித்துள்ளாா்.