அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, கரூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியான

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, கரூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடத்தப்படும் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு. வடநேரே.

வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் கரூா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வாக்கு எண்ணும் அறைகளில் மேஜைகள் போடப்பட்டு முகவா்கள் அமருவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியும் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், முகவா்கள், வாக்கு எண்ணுமிட முகவா்கள் ஆகியோா் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில், ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்து ,தொற்று இல்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு உள்ளவா்கள் சான்றிதழ் சமா்ப்பித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.

வேட்பாளா்கள், முகவா்கள் வசதிக்காக அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகங்கள், கரூா் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்கள், கிருஷ்ணராயபுரம், கடவூா் வட்டாட்சியா் அலுவலகங்கள், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம், குளித்தலை சாா் ஆட்சியரகம், அண்ணா சமுதாய மன்றம், தோகைமலை ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஏப்ரல் 29,30) ஆா்டிபிசிஆா் பரிசோதனை முகாம் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஷாஜகான், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு, மாவட்டக்டுதல் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com