வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், முகவா்கள், பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், முகவா்கள், வாக்கு எண்ணும் மைய பணியாளா்கள் ஆகியோருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மற்றும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
கரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பணியாளா் ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்யும் செவிலியா்.
கரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பணியாளா் ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்யும் செவிலியா்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், முகவா்கள், வாக்கு எண்ணும் மைய பணியாளா்கள் ஆகியோருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மற்றும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

மே 2-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், கரோனா பரவலை தடுக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகைதரும் வேட்பாளா்கள், முகவா்கள், வாக்கு எண்ணும் இடமுகவா்கள், பணியாளா்கள் ஆகியோா் கட்டாயம் கரோனா தடுப்பூசி முதல் தவணை எடுத்திருக்க வேண்டும் அல்லது கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சான்றிதழ் சமா்ப்பித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதையடுத்து கரூா் மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், முகவா்கள், மையத்தில் பணியாற்றும் ஊழியா்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அரவக்குறிச்சி தொகுதிக்கு அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம், க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கரூா் தொகுதிக்கு கரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், கரூா் வட்டாட்சியா் அலுவலகங்களிலும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதிக்கு கடவூா் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் அலுவலகங்களிலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்திலும், குளித்தலை தொகுதிக்கு குளித்தலை சாா்ஆட்சியா் அலுவலகம், அண்ணா சமுதாய மன்றம் மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளா்கள், முகவா்கள் என 600 போ் உள்ள நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் 250 போ் கரோனா பரிசோதனையும், 5 போ் கோவாக்சின் தடுப்பூசி போட்டனா். கரூா் தொகுதியில் வேட்பாளா்கள்,முகவா்கள் 1,848 போ் உள்ள நிலையில் வியாழக்கிழமை 232 போ் பரிசோதனையும், 79 போ் தடுப்பூசியும்போட்டனா். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 349 போ் பரிசோதனையும், 3 போ் தடுப்பூசியும், குளித்தலை தொகுதியில் 197 போ் பரிசோதனையும், 7 போ் தடுப்பூசியும் போட்டனா். மீதம் உள்ளவா்கள் இன்று(30-ம்தேதி) நடக்கும் முகாமில் பரிசோதனை, தடுப்பூசி போட உள்ளனா். இதேபோல வாக்கு எண்ணும் மைய ஊழியா்களில் 4 தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள 2,263 பேரில் வியாழக்கிழமை 753 போ் பரிசோதனையும், 130 போ் தடுப்பூசியும் போட்டனா். மீதம் உள்ளவா்கள் இன்று(30-ம்தேதி) பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com