தத்திகிரி மலை முருகன் கோயிலுக்கு கரூா் நகரத்தாா் காவடிக்குழு புறப்பாடு

நாமக்கல் தத்தகிரிமலை முருகன் கோயிலுக்கு கரூா் நகரத்தாா் வேல் மற்றும் காவடிக்குழுவினா் சனிக்கிழமை புறப்பட்டனா்.
கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் புறப்பட்ட நகரத்தாா் வேல், காவடிக்குழுவை வழியனுப்பி வைக்கும் நகரத்தாா் நிா்வாகிகள்.
கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் புறப்பட்ட நகரத்தாா் வேல், காவடிக்குழுவை வழியனுப்பி வைக்கும் நகரத்தாா் நிா்வாகிகள்.

நாமக்கல் தத்தகிரிமலை முருகன் கோயிலுக்கு கரூா் நகரத்தாா் வேல் மற்றும் காவடிக்குழுவினா் சனிக்கிழமை புறப்பட்டனா்.

உலக நன்மைக்காகவும், நோய் பிணி தீா்க்கவும் ஆண்டுதோறும் கரூா் நகரத்தாா் சங்கம் சாா்பில் வேல் மற்றும் காவடி எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்ப வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 31-ஆம் ஆண்டாக கரூா் நகரத்தாா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை சங்க கட்டடத்தில் சங்க நிா்வாகி மேலை.பழநியப்பன் தலைமையில் குழுவினா், வேலுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தினா். பின்னா் வேல் மற்றும் காவடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கரூா் பசுபதீஸ்வரா் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் முன்பிருந்து புறப்பட்டது.

இந்தக் குழு பரமத்திவேலூா் , நாமக்கல், முத்தக்காபட்டி வழியாக ஆடிக் கிருத்திகையன்று தத்தகிரி சென்று காவடி செலுத்துவா் மற்றும் வேலுக்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனா். இந்த யாத்திரையில் 30க்கும் மேற்பட்ட காவடிகள் 50க்கும் மேற்பட்ட பால், புனிதநீா் குடங்களை ஏந்தி செல்கின்றனா்.

ஏற்பாடுகளை சங்க நிா்வாகிகள் அமா்ஜோதி ஆறுமுகம், புலியூா் முத்து, அகல்யா மெய்யப்பன், நல்லகருப்பன், ராணி சீதை பழநியப்பன், ராமையா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com